உலக கோப்பை 2019: 4ம் வரிசையில் யார்..? மாஸ்டர் பிளாஸ்டரின் கருத்து

By karthikeyan VFirst Published May 24, 2019, 10:25 AM IST
Highlights

உலக கோப்பையில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்டிங் குறித்து இன்னும் விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் வலுவாக உள்ளன. 

உலக கோப்பையில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்டிங் குறித்து இன்னும் விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. விஜய் சங்கர் அல்லது கேஎல் ராகுல் நான்காம் வரிசையில் இறக்கப்பட வாய்ப்புள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் நான்காம் வரிசையிலும் இறக்கலாம். 

பேட்டிங் ஆர்டரில் தொடக்க ஜோடியை தவிர மற்ற எந்த வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று ஒதுக்குவதை விட சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம் என்று கபில் தேவ் தெரிவித்திருந்தார். சூழலுக்கு ஏற்றவாறு நான்காம் வரிசையில் வீரரை களமிறக்க வேண்டும் என்ற கபிலின் கருத்தைத்தான் சந்தீப் பாட்டீலும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் அதையே தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சச்சின், நான்காம் வரிசையை நான் ஒரு பிரச்னையாகவே பார்க்கவில்லை. நான்காம் வரிசையில் ஆட நம்மிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் கண்டிப்பாக நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடுவர். 

நான்கு என்பது வெறும் நம்பர் தான். நமது வீரர்கள் நிறைய கிரிக்கெட் ஆடியுள்ளனர். எனவே சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதுதான் முக்கியம். அது 4,,6,8 என எந்த வரிசையாக இருந்தாலும் வீரர்களுக்கு தங்களது ரோல் என்னவென்பது தெரியும். எனவே சூழல் குறித்து தெளிவாக இருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 
 

click me!