நான் செம வெறியில் இருக்கேன்.. உலக கோப்பைக்கு முன் எதிரணிகளை தெறிக்கவிடும் தென்னாப்பிரிக்க வீரர்

By karthikeyan VFirst Published May 23, 2019, 7:16 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியில் பேட்டிங்கை விட பவுலிங் அபாரமாக உள்ளது. ஸ்டெயின், ரபாடா, லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர் என பவுலிங் யூனிட் பயங்கரமாக உள்ளது. ஆம்லா, டுபிளெசிஸ், டுமினி என அனுபவ வீரர்கள் அதிகமாக உள்ளனர். குயிண்டன் டி காக், தென்னாப்பிரிக்க அணியின் அபாரமான திறமை. 
 
உலக கோப்பை நெருங்கிய நிலையில், அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

தென்னாப்பிரிக்க அணியில் பேட்டிங்கை விட பவுலிங் அபாரமாக உள்ளது. ஸ்டெயின், ரபாடா, லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர் என பவுலிங் யூனிட் பயங்கரமாக உள்ளது. ஆம்லா, டுபிளெசிஸ், டுமினி என அனுபவ வீரர்கள் அதிகமாக உள்ளனர். குயிண்டன் டி காக், தென்னாப்பிரிக்க அணியின் அபாரமான திறமை. 

குயிண்டன் டி காக்குடன் அனுபவ வீரர் ஆம்லா தான் தொடக்க வீரராக இறங்குவார். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஆம்லாவிற்கு 2018ம் ஆண்டு சரியாக அமையவில்லை. 2018ல் வெறும் 314 ரன்கள் மட்டுமே அடித்தார். உலக கோப்பை நெருங்கிய நேரத்தில் ஆம்லா ஃபார்மில்லாமல் இருந்தது அந்த அணிக்கு பெரும் இழப்பாக இருந்தது. 

ஆனால் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தொடரில் ஆம்லா சிறப்பாக ஆடி ஃபார்முக்கு திரும்பினார். அதனால் கடந்த ஓராண்டாக சரியாக ஆடாத வெறியில் இருக்கும் ஆம்லா, உலக கோப்பையை மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறார். முன்னெப்போதையும் விட தற்போது அதிகமான ரன் வேட்கையிலும் வெறியிலும் இருப்பதாக ஆம்லா தெரிவித்துள்ளார். உலக கோப்பைக்கு முன்னதாக ஆம்லா செம தன்னம்பிக்கையுடன் இருப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு கூடுதல் பலம்.
 
click me!