உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்தியா 9 போட்டிகளில் விளையாடுகிறது. வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடத்தப்படுகிறது.
2023 World Cup Champion: டை பிரேக்கரில் வெற்றி பெற்று சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன்!
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சில பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் இடம் பெற்று விளையாட உள்ளன. பயிற்சி போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. மொத்தமாக 10 பயிற்சி போட்டிகள் நடக்க உள்ளன. ஒவ்வொரு அணிகளும் 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளன. அதேபோல் பயிற்சிப் போட்டிகளுக்கான மைதானங்களாக கவுகாத்தி, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இன்போசிஸ் விளம்பரத் தூதராக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் ஒப்பந்தம்!
அதில் செப்டம்பர் 29 ஆம் தேதி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. அதே போன்று பாகிஸ்தான் – நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன. தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி இங்கிலாந்து - வங்கதேசம் அண்களும், நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளும் மோதுகின்றன.
அதே போன்று அக்டோபர் 3 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளும், இந்தியா – நெதர்லாந்து அணிகளும், பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளும் மோதுகின்றன. இதையடுத்து அக்டோபர் 5 ஆம் தேதி உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது.