Womens T20 World Cup: ஃபைனலில் பெத் மூனி அபார அரைசதம்! தென்னாப்பிரிக்காவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது ஆஸி.,

Published : Feb 26, 2023, 08:24 PM IST
Womens T20 World Cup: ஃபைனலில் பெத் மூனி அபார அரைசதம்! தென்னாப்பிரிக்காவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது ஆஸி.,

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பை ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 156 ரன்கள் அடித்து, 157 ரன்கள் என்ற சவாலான இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு நிர்ணயித்தது.  

மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்துவருகிறது. அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணீயும், இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.

5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக ஃபைனலுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவும் கோப்பைக்கான போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

IND vs AUS: எங்க மண்ணுல நாங்க தான்டா கெத்து..! நீங்க ஒயிட்வாஷ் ஆவது உறுதி.. ஆஸ்திரேலியாவை அலறவிடும் தாதா

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், கிரேஸ் ஹாரிஸ், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகன் ஸ்கட், டார்ஸி பிரௌன்.

தென்னாப்பிரிக்க மகளிர் அணி:

லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மேரிஸன் கேப், க்ளோ ட்ரையான், நாடின் டி க்ளெர்க், சுன் லூஸ் (கேப்டன்), அனெகெ பாஷ், சினாலோ ஜாஃப்டா (விக்கெட் கீப்பர்), ஷப்னிம் இஸ்மாயில், அயபாங்கா காகா, நான்குலுலேகோ லாபா.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை அலைஸா ஹீலி 18 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆட ஆரம்பித்த ஆஷ்லே கார்ட்னெர் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கிரேஸ் ஹாரிஸ்(10), லானிங்(10), எலைஸ் பெர்ரி (7) ஆகியோர் சோபிக்காமல் சீரான இடைவெளியில் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை பெத் மூனி அரைசதம் அடித்தார்.

ஹர்மன்ப்ரீத் கௌர் என்ன வேணா சொல்லட்டும்.. அவர் பண்ணது தப்பு தான்..! அலைஸா ஹீலி கடும் தாக்கு

ஃபைனலில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த பெத் மூனி 53 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி, 157 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவிற்கு நிர்ணயித்தது.
 

PREV
click me!

Recommended Stories

Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்
Ind vs NZ: கோலி, ரோகித் இன்.. 3 வீரர்களுக்கு கல்தா கொடுத்த தேர்வு குழு..?