PSL 2023: 41 வயதிலும் பவுலிங்கில் பட்டைய கிளப்பும் ஷோயப் மாலிக்..! முல்தான்அணியை ஈசியா வீழ்த்தி கராச்சி வெற்றி

Published : Feb 26, 2023, 07:37 PM IST
PSL 2023: 41 வயதிலும் பவுலிங்கில் பட்டைய கிளப்பும் ஷோயப் மாலிக்..! முல்தான்அணியை ஈசியா வீழ்த்தி கராச்சி வெற்றி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இந்த சீசனில் அபாரமாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள முல்தான் சுல்தான்ஸ் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கராச்சி கிங்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் இடையேயான போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முல்தான் சுல்தான்ஸ் அணி:

ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, டேவிட் மில்லர், குஷ்தில் ஷா, கார்லஸ் பிராத்வெயிட், அன்வர் அலி, அகீல் ஹுசைன், உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஈசானுல்லா.

IND vs AUS: எங்க மண்ணுல நாங்க தான்டா கெத்து..! நீங்க ஒயிட்வாஷ் ஆவது உறுதி.. ஆஸ்திரேலியாவை அலறவிடும் தாதா

கராச்சி கிங்ஸ் அணி:

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் வின்ஸ், டயாப் தாஹிர், ஷோயப் மாலிக், இமாத் வாசிம் (கேப்டன்), பென் கட்டிங், இர்ஃபான் கான், ஆமீர் யாமின், முகமது மூசா, டப்ரைஸ் ஷம்ஸி, அகிஃப் ஜாவேத்.

முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் மந்தமாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 12 பந்தில் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய தாஹிர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். பொறுப்புடன் பேட்டிங் ஆடிய தாஹிர் 46 பந்தில் 65 ரன்கள் அடித்தார். ஆனால் தொடக்க வீரர் மேத்யூவேட் படுமந்தமாக பேட்டிங் ஆடி 47 பந்தில் 46 ரன்கள் மட்டுமே அடித்ததால், கராச்சி கிங்ஸ் அணி 20 ஓவரில் 167 ரன்கள் மட்டுமே அடித்தது.

இந்த சீசனில் அபாரமாக பந்துவீசி வரும் முல்தான் சுல்தான்ஸ் ஃபாஸ்ட் பவுலர் ஈசானுல்லா இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டையும் வீழ்த்தினார். 

168 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி 5 ஓவரில் 41 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஷான் மசூத் 16 பந்தில் 25 ரன்களும், ரிஸ்வான் 29 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் ரைலீ ரூசோ மற்றும் டேவிட் மில்லர் ஆகிய 2 அதிரடி வீரர்களும் தலா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். குஷ்தில் ஷாவும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர்களும் மளமளவென ஆட்டமிழந்ததால் முல்தான் சுல்தான்ஸ் அணி 16.3 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

IND vs AUS: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு முட்டு கொடுக்கும் மேக்ஸ்வெல்..!

கராச்சி கிங்ஸ் அணியில் ஆடிவரும் 41 வயது சீனியர் ஆல்ரவுண்டரான ஷோயப் மாலிக், இந்த வயதிலும் அபாரமாக பந்துவீசி 3.3 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷம்ஸியும் 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். இந்த சீசனில் அபாரமாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவரும் முல்தான் சுல்தான்ஸ் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?