மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் தோற்றது இந்தியா

By karthikeyan VFirst Published Oct 7, 2022, 4:51 PM IST
Highlights

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது இந்தியா. 
 

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. முதல் 3 போட்டிகளில் இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. சில்ஹெட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, சபினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

இதையும் படிங்க - பும்ராவுக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் அவர் மட்டும்தான்..! டேல் ஸ்டெய்ன் தரமான ஆலோசனை

பாகிஸ்தான் மகளிர் அணி:

முனீபா அலி (விக்கெட் கீப்பர்), சிட்ரா அமீன், பிஸ்மா மரூஃப் (கேப்டன்), ஒமைமா சொஹைல், நிதா தர், ஆலியா ரியாஸ், ஆய்ஷா நசீம், சதியா இக்பால், துபா ஹசன், ஐமன் அன்வர், நஷ்ரா சந்து.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் சோபிக்கவில்லை. 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் மரூஃப் 32 ரன்கள் அடித்தார். ஒமைமா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த நிதா தர், 37 பந்தில் 56 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி, 138 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

இந்திய அணி சார்பில் அனைவருமே அபாரமாக பந்துவீசினர். ஆனாலும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்ட்ராகர் சற்று கூடுதல் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். தீப்தி 3 விக்கெட்டுகளையும், பூஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க - AUS vs WI: டேவிட் வார்னர் காட்டடி அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா
 
138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியில் ஸ்மிரிதி மந்தனா (17), மேகனா(15), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(2), ஹேமலதா(20), பூஜா (5), தீப்தி ஷர்மா(16), ஹர்மன்ப்ரீத் கௌர் (12) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்வரிசையில் ரிச்சா கோஷ் மட்டும் அடித்து ஆடி 13 பந்தில் 26 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் அவரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு இந்திய மகளிர் அணி ஆல் அவுட்டாகி 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோற்றது.
 

click me!