AUS vs WI: டேவிட் வார்னர் காட்டடி அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Oct 7, 2022, 3:56 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்து 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், கேமரூன் க்ரீன், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க - பும்ராவுக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் அவர் மட்டும்தான்..! டேல் ஸ்டெய்ன் தரமான ஆலோசனை

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், அகீல் ஹுசைன், யானிக் காரியா, அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சீனியர் தொடக்க வீரரான டேவிட் வார்னர், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை அடி வெளுத்துவாங்கினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த வார்னர், 41 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்தார்.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

அதன்பின்னர் டிம் டேவிட் அதிரடியாக ஆடி 20 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசினார். அதிரடியாக ஆடிய அவர் ஒபெட் மெக்காயின் பந்தில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டதுடன், சிறப்பாக முடித்து கொடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்மித் 17 ரன்களும், ஃபின்ச் 15 ரன்களும், வேட் 16 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 178 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி, 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
 

click me!