பும்ராவுக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் அவர் மட்டும்தான்..! டேல் ஸ்டெய்ன் தரமான ஆலோசனை

டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில், அவருக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் யார் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
 

dale steyn opines mohammed shami is the best replacement for jasprit bumrah in india squad for t20 world cup

டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பை நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. அஷ்வின், சாஹல், அக்ஸர் படேல் என ஸ்பின் பவுலிங் யூனிட்டும் சிறப்பாக உள்ளது. ரவீந்திர ஜடேஜா காயத்தால் ஆடாதபோதிலும், அவருக்கு சரியான மாற்று வீரராக அக்ஸர் படேல் திகழ்கிறார்.

Latest Videos

இதையும் படிங்க - IND vs SA: அபாரமான அரைசதம் அடித்து கடைசிவரை கடுமையாக போராடிய சஞ்சு சாம்சன்..! முதல் ODI-யில் இந்தியா தோல்வி

ஆனால் முன்னணி ஃபாஸ்ட் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அவருக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முகமது ஷமி, தீபக் சாஹர், முகமது சிராஜ் ஆகிய மூவரில் ஒருவர் தான் பும்ராவுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை கூறிவரும் நிலையில், தென்னாப்பிரிக்க முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னும் தனது கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், பும்ரா ஆடமுடியாததை நினைத்து வருத்தப்படுகிறேன். அவருக்கு நிகரான அனுபவம் வாய்ந்த சரியான மாற்று வீரர் யார் என்றால் என்னை பொறுத்தமட்டில் அது முகமது ஷமி தான். நல்ல வேகத்திலும், அதேவேளையில் ஸ்விங் செய்தும் வீசக்கூடிய பவுலர் ஷமி. உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் அதை செய்தும் காட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

தீபக் சாஹரும் நன்றாக ஸ்விங் செய்வார். சிராஜும் திறமையானவர் தான். ஆவேஷ் கான் நல்ல வேகத்தில் வீசுகிறார். ஆனால் அவர்களை விட ஷமி தான் பும்ராவிற்கு சரியான மாற்று வீரராக இருப்பார் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியுள்ளார்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image