மகளிர் பிரீமியர் லீக் என்று பெயர் மாற்றப்பட்ட மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்!

By Rsiva kumarFirst Published Jan 25, 2023, 4:53 PM IST
Highlights

மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மகளிர் பிரீமியர் லீக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 

ஆண்கள் ஐபிஎல் தொடரைப் போன்று இந்த ஆண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. வரும் மார்ச் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் சீசனில் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 5 அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கு ஐபிஎல்லின் 7 அணிகளான மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட அதானி குரூப், கேப்ரி குளோபல், அப்போலோ பைப்ஸ், அமித் லீலா எண்டர்பிரைசஸ், ஸ்ரீராம் குரூப், ஹல்டிராம்ஸ் குரூ, டோரண்ட் பார்மா, ஸ்லிங்ஷாட் 369 வென்சர்ஸ் பிரைவேட் லிமிட்டே நிறுவனம் உள்பட மொத்தமாக 17 நிறுவனங்கள் போட்டி போட்டன.

வரலாற்றில் முக்கியமான நாள்: ரூ.4669.99 கோடியை அள்ளிக் கொடுத்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்!

இன்று மும்பையில் நடந்த மகளிர் ஐபிஎல் அணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 அணிகள் உள்பட அதானி குரூப் (அகமதாபாத் அணி), கேப்ரி குளோபல் (லக்னோ அணி) ஆகிய நிறுவனங்களின் அணிகள் வெற்றி பெற்றன.

வேக வேகமாக முன்னேறும் சிராஜ்: ஐசிசி ஒரு நாள் போட்டி பௌர்லர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்!

இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் மகளிர் ஐபில் கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளின் வீராங்கனைகளுக்கான ஏலம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஏலம் முடிந்த பிறகு வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், ஆரம்பம் முதல் மகளிர் ஐபிஎல் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது மகளிர் பிரீமியர் லீக் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேக வேகமாக முன்னேறும் சிராஜ்: ஐசிசி ஒரு நாள் போட்டி பௌர்லர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்!

அதன்படி, அதானி குரூப் அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கு எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணியை ரூ.901 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ், டெல்லி அணியை ரூ.810 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கேப்ரி குளோபல் லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

WIPL மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட்: 5 அணிகளை ஏலத்தில் எடுக்க 17 நிறுவனங்கள் போட்டி? வெற்றி பெறுவது யார்?

அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரவேட் லிமிடெட்., - அகமதாபாத் - ரூ.1289 கோடி    
இண்டியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்., - மும்பை - ரூ.912.99 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ஸ் பிரவேட் லிமிடெட்., - பெங்களூரு - ரூ.901 கோடி
ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - டெல்லி - ரூ.810 கோடி
கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்., - லக்னோ - ரூ.757 கோடி

இந்த ஏலம் குறித்து பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், இது வரலாற்றில் முக்கியமான நாள். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆண்களுக்காக நடந்த ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தின் மூலம் கிடைத்ததை விட மகளிருக்கான ஐபிஎல் ஏலம் மூலமாக பிசிசிஐக்கு ரூ.4669.99 கோடி கிடைத்துள்ளது. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் வகுத்துள்ளது.

மனைவி மற்றும் மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.1.30 லட்சம் கொடுக்க முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவு!

மகளிர் கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்துக்கும் ஒரு மாற்றமான பயணத்திற்கான வழி. மகளிர் பிரீமியர் லீக்கானது, மகளிர் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு வரும். ஒவ்வொரு பங்குதாரருக்கும் பயன் அளிக்கும் வகையில் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்பையும் இது ஏற்படுத்தி தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!