வேக வேகமாக முன்னேறும் சிராஜ்: ஐசிசி ஒரு நாள் போட்டி பௌர்லர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்!

Published : Jan 25, 2023, 02:46 PM IST
வேக வேகமாக முன்னேறும் சிராஜ்: ஐசிசி ஒரு நாள் போட்டி பௌர்லர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்!

சுருக்கம்

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பௌலர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.  

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த முகமது சிராஜ் முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முதல் போட்டியில் ஒரு விக்கெட்டும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான தொடரில் முதல் ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்டும், 2ஆவது போட்டியில் 3 விக்கெட்டும் கைப்பற்றினார். 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றி, 5 விக்கெட் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியை தழுவினார். இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் இந்தியா 3-0 என்று கைப்பற்றியது.

WIPL மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட்: 5 அணிகளை ஏலத்தில் எடுக்க 17 நிறுவனங்கள் போட்டி? வெற்றி பெறுவது யார்?

இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்தியா இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 என்ற கணக்கிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக இருந்த சுப்மன் கில், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.

மனைவி மற்றும் மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.1.30 லட்சம் கொடுக்க முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவு!

இரு தொடர்களிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஐசிசி ஒரு நாள் தொடர் பௌலர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹசல்வுட் நம்பர் 1 இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி முகமது சிராஜ் 729 ரேட்டிங் பெற்று நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் 6ஆவது இடம் பிடித்துள்ளார். டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

IND vs NZ: முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான அணியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து தொடரை கைப்பற்றியதன் மூலமாக இந்தியா நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக நியூசிலாந்து நம்பர் 1 இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஐசிசி ஒரு நாள் போட்டி அணிக்கான தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!