மனைவி மற்றும் மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.1.30 லட்சம் கொடுக்க முகமது ஷமிக்கு கோர்ட் உத்தரவு!

By Rsiva kumarFirst Published Jan 25, 2023, 10:39 AM IST
Highlights

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது மனைவி ஹசின் ஜஹான் மற்றும் மகளின் பரமாரிப்பு செலவுக்காக ஓவ்வொரு மாதமும் ரூ.1.30 லட்சம் வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முக்கிய பங்கு வகிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக கூட சிறப்பாக பந்து வீசினார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார். 

IND vs NZ: முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இந்த புகார்கள் அனைத்திற்கும் ஷமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு முகமது ஷமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். கடந்த 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டிற்கான ஷமியின் வருமான வரி கணக்கின்படி, ஷமியின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடிக்கு அதிகமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ஜீவனாம்சமாக மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் என்றும், ஹசின் ஜஹானின் செலவுக்கு ரூ.7 லட்சம் என்றும் மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் என்று ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

இதையடுத்து, கொல்கத்தா நீத்மன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, ஷமியின் வழக்கறிஞர் சலீம் ரஹ்மான் கூறியிருப்பதாவது: ஷமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடைசி ODI-யிலும் இந்தியா அபார வெற்றி..! நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை

ஆனால், ஷமியோ கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தனது மகளுக்காக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் கொடுத்து வருகிறார். ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு என்று ரூ.7 லட்சம் வேண்டும் என்றும், மகளுக்கு ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். தற்போது நீமன்றம் ஹசின் ஜஹானுக்கான சொந்த செலவுக்கு ரூ.50 ஆயிரமும், மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் ரூ.80 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!