IND vs NZ: முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Jan 25, 2023, 12:08 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது.

அதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. வரும் 27ம் தேதி முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடக்கிறது. டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, சீனியர் வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் ஆடாத நிலையில், முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். பிரித்வி ஷா இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், சிறப்பாக ஆடிவரும் ஷுப்மன் கில்லை உட்காரவைக்க முடியாது என்பதாலும், இஷான் கிஷன் அவருக்கான இடத்தை பிடித்துவிட்டார் என்பதாலும் அவரையும் ஒதுக்க முடியாது. எனவே இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்.

3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசையில் ராகுல் திரிபாதி, 5ம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, 6ம் வரிசையில் தீபக் ஹூடா ஆடுவார்கள். ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவி ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

கடைசி ODI-யிலும் இந்தியா அபார வெற்றி..! நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை

முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

இஷான் கிஷன், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி.
 

click me!