நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா

By karthikeyan VFirst Published Jan 24, 2023, 11:13 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
 

இந்தியாவில் இந்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி ஆடிய 3 ஒருநாள் தொடர்களையும் வென்று அசத்தியுள்ளது. 

இலங்கையை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் ஒயிட்வாஷ் செய்து வென்றது இந்திய அணி. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை வென்றுவிட்டது இந்திய அணி.

கடைசி ODI-யிலும் இந்தியா அபார வெற்றி..! நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்று இந்தியா சாதனை

கடைசி போட்டி இன்று இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா (101) மற்றும் ஷுப்மன் கில்லின் (112) அபார சதங்களால் 50 ஓவரில் 385 ரன்களை குவித்து, நியூசிலாந்தை 295 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 114 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது.

2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் லெவன்..! ஒரேயொரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்.. கேப்டன் யார் தெரியுமா..?

இந்தியாவை விட ஒரேயொரு புள்ளி குறைவாக பெற்றுள்ள இங்கிலாந்து அணி 113 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளன.
 

click me!