இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அயர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அயர்லாந்துக்கு சென்ற இந்திய அணிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். இதில், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்சி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவி பிஷ்னாய், முகேஷ் குமார், ஷாபாஸ் அகமது, ஜித்தேஷ் சர்மா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றனர்.
FIDE World Cup Final 2023: டிரா ஆன முதல் சுற்று இறுதிப் போட்டி: டிராபியை கைப்பற்றுவாரா பிரக்ஞானந்தா?
ஏற்கனவே நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகளில் இடம் பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜித்தேஷ் சர்மா, ஷாபாஸ் அகமது, ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3; வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?
அயர்லாந்து டி20 தொடர் முடிந்த நிலையில், ஒரு வாரத்திற்குள்ளாக இந்தியா ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக இடம் பெற்றிருக்கிறார்.