உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து எனக்கு தெரியாது, ஆனால், இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 இந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆசிய கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கிறது. இதற்கு முன்னதாக தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்தவித ஐசிசி டிராபியையும் கைப்பற்றவில்லை. எனினும், இந்த முறை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியன் மீண்டும் உதிக்கும் - இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து யுஸ்வேந்திர சஹால் பதிவு!
ஆசிய கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியிலிருந்து தான் 15 பேர் கொண்ட வீரர்கள் உலகக் கோப்பை தொடருக்கும் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த நிலையில், உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உலகக் கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று எனக்கு தெரியாது. எனினும் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.
இறுதி முடிவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார் – பிரக்ஞானந்தாவின் தந்தை பெருமிதம்!