இந்தியா என்ற பெயரை மத்திய அரசு பாரத் என்று பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pakistan vs Bangladesh: வங்கதேசத்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் ஹீரோஸ்: 193 ரன்களுக்கு ஆல் அவுட்!
வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க இந்தியா என்ற பெயர் பாகிஸ்தானிற்கு சொந்தமானது என்று தற்போது புதிய சர்ச்சை கிளம்ப துவங்கியுள்ளது. அதாவது சிந்து சமவெளி பகுதியில் வாழ்பவர்கள் தான் இந்தியா என்ற சொல் குறிப்பிடுகிறது. சிந்து சமவெளி என்பது பாகிஸ்தானிலிருந்து தான் தொடங்குகிறது. இதன் காரணமாக இந்தியா என்ற பெயரை பாகிஸ்தான் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று காலம் காலமாக கேட்டு வந்தது. கடைசியாக இந்தியா என்ற பெயரானது நமக்கு கிடைக்க, பாகிஸ்தான் என்ற பெயரானது அண்டை நாட்டினருக்கு கிடைத்துவிட்டது. இந்த நிலையில், தான் இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றிக் கொண்டால், இந்தியா என்ற பெயரை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.
MS Dhoni Bharat: பாரதியனாக மாறிய தோனி – வைரலாகும் இன்ஸ்டா புரோபைல் பிக்ஸர்!
ஒருவேளை நாடாளுமன்றத்தில் இந்தியா என்ற பெயரானது பாரத் என்று பெயர் மாற்றம் செய்யும் மசோதா நிறைவேறிவிட்டால், பாகிஸ்தான் இந்தியா என்று தங்களது பெயரை மாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அப்படி நடந்துவிட்டால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கும் போது இந்தியா பாரத் என்று மாறிவிடும். இந்தியா பாகிஸ்தான் என்று சொல்லி வந்த நமக்கு இந்தியா பாரத் என்று சொல்ல வேண்டி வரும்.