மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயகே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சசித்ர சேனநாயகே. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று ஒரு டெஸ்ட் போட்டி, 49 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 290 ரன்களும், 53 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். கடந்த 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைய வென்ற இலங்கை அணியில் இடம் பிடித்தவர்.
MS Dhoni Bharat: பாரதியனாக மாறிய தோனி – வைரலாகும் இன்ஸ்டா புரோபைல் பிக்ஸர்!
கடந்த 2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொலைபேசி மூலமாக மேட்ச் பிக்ஸிங் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இரு வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த அவர் முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அவரை கைது செய்துள்ள நிலையில், அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் அட்டார்னி ஜெனரல் துறை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.