குஜராத் ஜெயிண்ட்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்னும் 6 போட்டி தான் இருக்கு!

Published : Mar 06, 2023, 12:45 PM IST
குஜராத் ஜெயிண்ட்ஸ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்னும் 6 போட்டி தான் இருக்கு!

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் 2 போட்டிகளில் தோல்வியடைந்த குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  

ஆண்கள் ஐபிஎல் தொடரைப் போன்று மகளிர் பிரீமியர் லீக் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனில் குஜராத் ஜெயிண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என்று 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். அந்த வகையில் ஒரு அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடும். இதில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி தான் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

எங்கேயோ போன வெற்றியை கையோடு கூட்டி வந்த கிரேஸ் ஹாரிஸ்: யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி!

அப்படிப்பட்ட சூழலில் தற்போது வரையில் நடந்து முடிந்த போட்டிகளை வைத்து பார்க்கும் போது 2 போட்டிகளில் மட்டும் விளையாடியது குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி தான். இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும், 6 போட்டிகள் உள்ள நிலையில், 6 போட்டியிலும் குஜராத் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறும். ஒருவேளை மற்ற அணிகள் 8 அல்லது 7 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும்.

போட்டி போட்டு சிக்சரும், பவுண்டரியுமா விளாசிய ஷெஃபாலி வர்மா, மேக் லேனிங் - டெல்லி கேபிடல்ஸ் 223 ரன்கள்!

ஏற்கனவே நடந்து முடிந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்து 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதே போன்று நேற்று நடந்த யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டத்தில் இருந்த குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றியை யுபி வாரியர்ஸுக்கு தாரைவார்த்து கொடுத்தது. இதன் மூலம் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி முதல் போட்டியின் போது காயமடைந்த நிலையில், ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். 2ஆவது போட்டியில் அவர் களமிறங்கவில்லை.

எங்கு ஆரம்பித்தாரோ அங்கேயே பிரியாவிடை பெற்ற சானியா மிர்சா: இவையெல்லாம் மகிழ்ச்சியின் கண்ணீர்!

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆலோகராக உள்ள நிலையில், 2 போட்டிகளில் தோல்வியை கண்டதால் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் பவுண்டரி, முதல் சிக்சர், முதல் விக்கெட் எடுத்து வரலாற்றில் இடம் பிடித்த வீராங்கனைகள்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?