இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இந்தியா தனது 3ஆவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஐசிசி ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இது தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது? முதல் போட்டி யாருடன்?
இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் கடைசியாக வெற்றி பெறும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். இந்த நிலையில், தற்போது ஆண்களுக்கான உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை வெளியீடு!
முதல் போட்டி:
இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா முதல் போட்டி:
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
ரவுண்ட் ராபின்:
ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணியுடன் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி முதல் நான்கு இடங்கள் நாக் அவுட் நிலை மற்றும் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்தியா – பாகிஸ்தான்:
அதிக எதிர்பார்ப்பைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 16ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அரையிறுதிப் போட்டி – ரிசர்வ் டே
முதல் அரையிறுதிப் போட்டி வரும் நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2ஆவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16 ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த இரு போட்டிகளின் போது மழை பெய்தால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடத்தப்படும்.
அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!
இறுதிப் போட்டி:
இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19 ஆம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியின் போதும் மழை பெய்தால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் நவம்பர் 20 ஆம் தேதி போட்டி நடத்தப்படும். இந்த எல்லா போட்டிகளும் பகல் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நடக்கும் இடங்கள்:
மொத்தம் 10 இடங்களில் இந்த உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில், ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் ஆகிய இடங்களில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 3 வரை பயிற்சி போட்டிகள் நடைபெறும்.
பிரித்வி ஷா ஒரு அப்பாவி; எல்லாத்துக்கும் காரணம் இந்த நடிகை தான்: கோர்ட்டில் மும்பை போலீஸ் விளக்கம்!
இந்தியா போட்டிகள்:
அக்டோபர் 8 – இந்தியா – ஆஸ்திரேலியா – சென்னை
அக்டோபர் 11 – இந்தியா – ஆப்கானிஸ்தான் – டெல்லி
அக்டோபர் 15 – இந்தியா – பாகிஸ்தான் – அகமதாபாத்
அக்டோபர் 19 – இந்தியா – வங்கதேசம் – புனே
அக்டோபர் 22 – இந்தியா – நியூசிலாந்து – தர்மசாலா
அக்டோபர் 29 – இந்தியா – இங்கிலாந்து - லக்னோ
நவம்பர் 02 – இந்தியா – குவாலிஃபையர் 2 – மும்பை
நவம்பர் 05 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – கொல்கத்தா
நவம்பர் 11 – இந்தியா – குவாலிஃபையர் 1 – பெங்களூரு
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து டுவிட்டரில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அக்டோபர் 15 ஆம் தேதி பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் அன்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆகையால், இந்தப் போட்டி அன்றைய நாளில் நடத்தப்படுகிறது.
🚨 Mark your calendars! 🚨
Pakistan 🇵🇰 vs. India 🇮🇳 on 15th October in Ahmedabad! 🍿
Also on 15th October: Babar Azam's birthday 👑 | | pic.twitter.com/BmELtQ9rb6