ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா தவிர, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. 2 இடங்களுக்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன.
குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றன. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் சிக்ஸ் போட்டி வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது.
அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!
இந்த நிலையில், 13ஆவது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இன்னும், 100 நாட்கள் உள்ள நிலையில், ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி இன்று சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 100 நாட்கள் 18 நாட்களுக்கு சென்று கடைசியாக உலகக் கோப்பை டிராபி மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது.
பிரித்வி ஷா ஒரு அப்பாவி; எல்லாத்துக்கும் காரணம் இந்த நடிகை தான்: கோர்ட்டில் மும்பை போலீஸ் விளக்கம்!
Schedule is out pic.twitter.com/S9ftMyVXaO
— Ujjawal Sinha (@UjjawallSinha)