உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியின் லீக் சுற்றிலிருந்து நேபாள், அயர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வெளியேறியுள்ளன.
ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 2 இடங்களுக்கான போட்டியில் 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால், இந்தியா நேரடியாகவே தகுதி பெற்றது. இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் ஓவரில் பின்னி பெடலெடுத்த வான் பீக் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்; வெஸ்ட் இண்டீஸ் பரிதாப தோல்வி!
இதையடுத்து எஞ்சிய 2 இடங்களுக்கான உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஓமன், ஸ்காட்லாந்து, நேபாள், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி போட்டன. குரூப் ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாள், அமெரிக்கா ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம் பெற்று விளையாடின.
அஜய் கிருஷ்ணா வேகத்தில் சுருண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்: தொடர்ந்து 4ஆவது போட்டியிலும் தோல்வி!
இதில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற நேபாள் 3 போட்டிகளிலும், அமெரிக்கா 4 போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறின. இதே போன்று குரூப் பி பிரிவில் இடம் பெற்ற அயர்லாந்து 3 போட்டியில் விளையாடி 3 போட்டியிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3 போட்டியில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறின.
இதைத் தொடர்ந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இடம் பெறும் 2 அணிகளுக்கான சூப்பர் சிக்ஸ் சுற்று நடக்க இருக்கிறது. இதற்கு, குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் தகுதி பெற்றுள்ளன. வரும் 29 ஆம் தேதி சூப்பர் சிக்ஸ் போட்டிகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.