
ஆசியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டிகளில் ஒன்று தான் ஆசிய கோப்பை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மூலம் ஆசிய கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில், இந்தியா வெற்றி பெற்றது.
கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் நடந்த 15 சீசன்களில் முறையே இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளன. இதில், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் 2ஆவது இடத்திற்கு பல முறை வந்துள்ளன. ஆனால், ஒரு முறை கூட வங்கதேச அணி ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியதில்லை.
ODI World Cup 2023: உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 16ஆவது ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில், 6 இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசன், நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இடம் பெற்று விளையாடின. லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் வெளியேறின. இதையடுத்து சூப்பர் 4 சுற்று போட்டி நடத்தப்பட்டது. இதில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், இலங்கை மற்றும் இந்தியா மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில், நாளை 17 ஆம் தேதி கொழும்புவில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நடக்கிறது. இலங்கை 13 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமின்றி நடப்பு சாம்பியன் வேறு. மேலும், 1986, 1997, 2004, 2008, 2014, 2022 என்று 6 முறை ஆசிய கோப்பை சாம்பியனாகியுள்ளது. மாறாக, 7 முறை 2ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தியா 11ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரையில் இந்தியா ஆசிய கோப்பையில் 7 முறை வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், 9ஆவது முறையாக இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இலங்கை சாம்பியனாகியுள்ளது.
இந்த நிலையில், நாளை 17 ஆம் தேதி நடக்க உள்ள ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 16ஆவது ஆசிய கோப்பை டிராபியை தூக்கும் அந்த ரோகித் சர்மாவா? தசுன் ஷனாகாவா? அந்த டீம் எது? இலங்கையா? இந்தியா? என்பது இன்னும் 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே எல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.
BAN vs IND, Asia Cup 2023: ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்தியராக சுப்மன் கில் படைத்த புதிய சாதனை!
இலங்கை:
தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் ஜனித் பெரேரா, குசால் மெண்டிஸ் (துணை கேப்டன்), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரமா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, மதீஷா பதிரனா, கசுன் ஹேமந்த் ரஜிதா, தசுன் ஹேமந்த், பிரமோத் மதுஷன், ஃபினுரா ஃபெர்னாண்டோ