இந்தியா நடத்தும் உலகக் கோப்பை இன்னும் 19 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், டிராபியானது தற்போது சென்னை வந்துள்ளது. அந்த டிராபியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இன்னும் 19 நாட்களில் அதாவது, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை 2023 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் இடம் பெற்று 10 மைதானங்களிலில் போட்டி நடத்தப்படுகிறது. ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்களை அறிவித்து, உலகக் கோப்பைக்கு வீரர்களை தயார்படுத்தியும் வருகிறது. உலகக் கோப்பைக்கு முன்னதாக சில அணிகள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் தான் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கோப்பை, டிராபியானது சுற்றுப்பயணத்தின் 11 வது கட்டத்தின் ஒரு பகுதியாக தென் மாநிலமான சென்னையை அடைந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, இந்த டிராபியுடன் தமிழக முதல்வர் போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகக் கோப்பை டிராபியானது கடந்த ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருகிறது. அன்று முதல் சில மாதங்கள், இந்த டிராபியானது உலகம் முழுவதும் குவைத், பஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா என்று 18 நாடுகள் சென்று கடைசியாக இந்தியாவிற்கு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
BAN vs IND, Asia Cup 2023: ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்தியராக சுப்மன் கில் படைத்த புதிய சாதனை!
will win! pic.twitter.com/cbzpM651zl
— M.K.Stalin (@mkstalin)