ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
1987 முதல் அனைத்து ஐசிசி டிராபிகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த ஆஸ்திரேலியா!
பின்னர், 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோகித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49 ரன்களும், அஜிங்கியா ரஹானே 46 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
India vs Australia WTC Final 2023: 2ஆவது ஃபைனலிலும் தோற்ற இந்தியா: WTC சாம்பியனான ஆஸ்திரேலியா சாதனை!
இந்த தோல்வியின் மூலமாக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறையும் இங்கிலாந்தில் தான் டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த முறையும் இங்கிலாந்தில் தான் டெஸ்ட் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டுமென்றால் அங்கே 20 நாட்களுக்கு முன்னதாக சென்றிட வேண்டும்.
கைவிரித்த கோலி, ஜடேஜா: வெற்றிக்கு போராடும் இந்தியா!
மேலும், பயிற்சி போட்டியிலும் விளையாட வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்து ஒரு வாரத்திற்கு முன்பு தான் இங்கிலாந்து சென்றது. அங்கு, ஒரு வாரம் பயிற்சி செய்தனர். இது ஒரு காரணமாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாவது காரணம், டாஸ் ஜெயிச்சு, பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஓவல் மைதானத்தில் டாஸ் சாதகமாக விழும்போதே அதனை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் பவுலிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்து விட்டார்.
Asia Cup 2023: பாகிஸ்தானில் 4, இலங்கையில் 9 போட்டிகள் நடத்தப்படும் - ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!
மூன்றாவது காரணம், ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாதது. உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக அஸ்வின் இந்திய பிளேயிங் 11ல் இடம் பெற்றிருக்க வேண்டும். பார்டர் கவாஸ்கர் டிராபியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள்.