1987 முதல் அனைத்து ஐசிசி டிராபிகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்த ஆஸ்திரேலியா!

By Rsiva kumar  |  First Published Jun 11, 2023, 6:23 PM IST

கடந்த 1987 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை முதல் தற்போது வரையில் அனைத்து ஐசிசி டிராபிகளையும் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த7ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்து முதல் தவறு செய்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 296 ரன்கள் குவித்தது.

India vs Australia WTC Final 2023: 2ஆவது ஃபைனலிலும் தோற்ற இந்தியா: WTC சாம்பியனான ஆஸ்திரேலியா சாதனை!

Tap to resize

Latest Videos

இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 443 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் வெளியேற, புஜாரா 27 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். ஒரு கட்டத்தில் விராட் கோலி 49 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறைந்தது.

கைவிரித்த கோலி, ஜடேஜா: வெற்றிக்கு போராடும் இந்தியா!

அதன் பிறகு ரஹானேவும் 46 ரன்களில் வெளியேறவே இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இறுதியாக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே ஆஸ்திரேலியா 209 ரன்களில் வெற்றி கண்டது. அதுமட்டுமின்றி கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் ஐசிசி டிராபியை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதே போன்று 1999ம் ஆண்டு உலகக் கோப்பை, 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2006 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2007 உலகக் கோப்பை, 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை என்று ஒவ்வொரு ஐசிசி டிராபியை கைப்பற்றி கடைசியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியையும் கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்:

1987, 1999, 2003, 2007, 2015

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி:

2006, 2009.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: 2021

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபி 2023:

Asia Cup 2023: பாகிஸ்தானில் 4, இலங்கையில் 9 போட்டிகள் நடத்தப்படும் - ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!

 

World Cup in 1987.
World Cup in 1999.
World Cup in 2003.
Champions Trophy in 2006
World Cup in 2007.
Champions Trophy in 2009.
World Cup in 2015
T20 World Cup in 2021.
World Test Championship in 2023.

Australia has completed the ICC Trophy. pic.twitter.com/9w7RMfxJDq

— Johns. (@CricCrazyJohns)

 

click me!