உலகக் கோப்பையில் இலங்கை எதிர்கொள்ளும் அணிகள் என்னென்ன?

By Rsiva kumar  |  First Published Jul 2, 2023, 9:32 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று சூப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், உலகக் கோப்பையில் இலங்கை முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது.


உலகக் கோப்பை தகுதிச் சுற்று சூப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சீன் வில்லியம்ஸ் மட்டும் நிதானமாக ஆடி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராசா 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறவே ஜிம்பாப்வே அணி 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது.

போராடி தோற்ற சீகம் மதுரை பாந்தர்ஸ்; லைகா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Tap to resize

Latest Videos

பந்து வீச்சைப் பொறுத்த வரையில் இலங்கை அணியில் மகீஷ் தீக்‌ஷனா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மதீஷா பதிரனா 2 விக்கெட்டுகளும், ஷனாகா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷாங்கா அதிரடியாக ஆடி 102 பந்துகளில் 14 பவுண்டரி உள்பட 101 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். திமுத் கருணாரத்னே 30 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை அணி 33.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டம் காட்டிய சுரேஷ் குமார், ஷாருக்கான்: லைகா கோவை கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு!

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டியிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கான 9ஆவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதன் மூலமாக இலங்கை அணி நவம்பர் 2 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை சாம்பியனானது. இந்தப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உடன் பலப்பரீட்சை: ஜெயிச்சா இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்!

இலங்கை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், இலங்கை விளையாடும் போட்டிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அக்டோபர் 07 – இலங்கை - தென் ஆப்பிரிக்கா – டெல்லி

அக்டோபர் 12 – இலங்கை – பாகிஸ்தான் – ஹைதராபாத்

அக்டோபர் 16 – இலங்கை – ஆஸ்திரேலியா – லக்னோ

அக்டோபர் 21 – குவாலிஃபையர் 1 – இலங்கை – லக்னோ

அக்டோபர் 26 – இங்கிலாந்து – இலங்கை – பெங்களூரு

அக்டோபர் 30 – ஆப்கானிஸ்தான் – இலங்கை – புனே

நவம்பர் 02 – இந்தியா – இலங்கை – மும்பை

நவம்பர் 06 – வங்கதேசம் – இலங்கை – டெல்லி

நவம்பர் 09 – நியூசிலாந்து – இலங்கை – பெங்களூரு

click me!