IND vs ZIM First T20I Match: இந்திய அணியின் பிளேயின் 11 எப்படி இருக்கும் – 3 இடங்களை உறுதியாக சொன்ன கில்!

By Rsiva kumarFirst Published Jul 6, 2024, 1:07 PM IST
Highlights

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்க உள்ள நிலையில் 3ஆவது வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது நேற்று முன் தினம் நாடு திரும்பியது. முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இந்திய அணி வீரர்கள் அதன் பிறகு மும்பையில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடைசியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரில் கடைசியாக விளையாடிய இறுதிப் போட்டியுடன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Latest Videos

ஜூனியர்களுடன் களமிறங்கும் சுப்மன் கில் – இந்தியா – ஜிம்பாப்வே போட்டியை எப்போது, எத்தனை மணிக்கு பார்க்கலாம்?

இதில், ரியான் பராக், ஹர்ஷித் ராணா, கலீல் அகமது, அபிஷேக் சர்மா, துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் சிறப்பாக விளையாடி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரேயில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து 3ஆவது வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குகிறார்.

வெற்றியோடு தொடங்கிய லைகா கோவை கிங்ஸ் – ரிட்டர்யர்டு ஹர்ட்டில் வெளியேறிய பிரதோஷ் ரஞ்சன் பால்!

இதன் மூலமாக இந்திய அணியில் முதல் 3 இடங்களுக்கான வீரர்கள் யார் யார் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 8 இடங்களில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதன்படி இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் குமார், ஹர்ஷித் ராணா.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கன், முகேஷ் குமார், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா.

சேப்பாக்கிற்கு ஆட்டம் காட்டிய பாலசுப்பிரமணியம் – அரைசதம் விளாசி அசத்தல் – லைகா கோவை கிங்ஸ் 141 ரன்கள் குவிப்பு

click me!