குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியன் டிராபியை கைப்பற்றியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி கடந்த 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது.
டெட்லிஃப்டிங்கில் 60 கிலோவை அசால்ட்டா தூக்கி அனைவரது கவனம் ஈர்த்த 8 வயது சிறுமி அர்ஷியா கோஸ்வாமி!
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்துக் கொடுத்ததன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியன் டைட்டில் வென்றது. ஆனால், சிஎஸ்கே வெற்றி பெற சில முக்கிய காரணங்கள் உண்டு. அது என்னென்ன என்று பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
சுப்மன் கில் தனது விக்கெட்டை இழக்கவில்லை என்றால், குஜராத் இன்னும் அதிகமாகவே ரன்கள் எடுத்திருக்கும். கடந்த 4 போட்டிகளில் 3ல் சதம் விளாசியுள்ளார். ஆதலால், அவர் மீது அதிக எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வைத்திருந்தார். இந்தப் போட்டியில் அவர் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியது தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அரசியல் களத்தில் ஆட தயாரான அம்பத்தி ராயுடு!
சென்னை அணியில் அதிரடியாக ஆடிய டெவான் கான்வே ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இதுவரையில் எந்தப் போட்டியிலும் ஆடாத வகையில் இந்தப் போட்டியில் தனது ருத்ரதாண்டவத்தை ஆடிவிட்டார். 25 பந்துகளில் அவர் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது நல்ல தொடக்கம் சிஎஸ்கேயின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்தார். இறுதியில் ஜடேஜா வின்னிங் ஷாட் கொடுக்கவில்லை என்றால், கான்வே தான் அதிகமாக பேசப்பட்டிருப்பார்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே இருவரது பேட்டிங்கும் சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கடைசியில் 2 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்கவே சிஎஸ்கேயின் வெற்றி உறுதியானது.
பிக்ஷர் ஆஃப் தி டே: சிஎஸ்கே சாம்பியனுக்குப் பிறகு குடும்பத்தோடு போட்டோ எடுத்த தோனி!