டெட்லிஃப்டிங்கில் கலந்து கொண்டு 60 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி ஹரியானாவைச் சேர்ந்த 8 வயது நிரம்பிய அர்ஷியா கோஸ்வாமி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியைச் சேர்ந்தவர் 8 வயதே ஆன அர்ஷியா கோஸ்வாமி. இவர், டெட்லிஃப்டிங்க் போட்டியில் கலந்து கொண்டு 60 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். சமூக வலைதளம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அர்ஷியா கோஸ்வாமி பற்றிய வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது. இவ்வளவு ஏன், இந்தியாவின் இளைய டெட் லிஃப்டர் என்று அழைக்கப்படுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
யார் இந்த அர்ஷியா கோஸ்வாமி?
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி பிறந்த அர்ஷியா கோஸ்வாமி தனது 5 வயது முதல் எடை மற்றும் பவர் லிஃப்டராக பயணத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 26 கிலோ இருந்த அர்ஷியா 6 வயது 11 மாதங்கள் மற்றும் 27 நாட்களில் உடல் எடையை இரண்டு மடங்கிற்கு மேல் குறைத்து சாதனை படைத்தார். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இளைய டெட் லிஃப்டர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அரசியல் களத்தில் ஆட தயாரான அம்பத்தி ராயுடு!
அர்ஷியா கோஸ்வாமி பவர் லிஃப்டிங் மட்டுமின்றி டேக்வாண்டோவிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். 8 வயதில் மாநில அளவில் நடந்த பளூதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்றார். அர்ஷியா கோஸ்வாமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி பயிற்சியாளரான அவரது தந்தை வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கோஸ்வாமியின் வழக்கமான பயிற்சிகளில் பளூதூக்கும் ஆர்வத்தையும் அவள் வளர்த்து கொண்டாள்.
பிக்ஷர் ஆஃப் தி டே: சிஎஸ்கே சாம்பியனுக்குப் பிறகு குடும்பத்தோடு போட்டோ எடுத்த தோனி!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு தான் தனது உத்வேகம் என்பதை அர்ஷியா வெளிப்படுத்தினார். பளூதூக்குதலை மிகவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.