இந்திய அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் என்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி டிரினிடாட்டின் தாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி விளையாடுகிறது. ஏற்கனவே 2ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போட்டியிலும் அவர்கள் இடம் பெறவில்லை.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அதானாஸ், ஷாய் ஹோப் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கீச் கார்டி, ரோமாரியோ ஷெப்பர்டு, யானிக் கரியா, அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டேன் சீல்ஸ்
இந்தியா:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனத்கட், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்
பிசிசிஐயின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டெண்டர் வெளியீடு; ஆகஸ்ட் 21 கடைசி தேதி!
மேலும், அக்ஷர் படேல் மற்றும் உம்ரான் மாலிக்கிற்குப் பதிலாக ஜெயதேவ் உனத்கட் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே நடந்து முடிந்த இரு ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்று வெற்றி பெற்று சமனில் இருந்தன. தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடந்து வருகிறது. தற்போது வரையில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ஓவருக்கு 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் ஆணவம் இல்லை – கபில் தேவ் விமர்சனத்திற்கு ஜடேஜா பதிலடி!
டிரினிடாட்டின் தாரூபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் முதல் முதலாக ஒரு நாள் போட்டி நடக்கிறது. இதுவரையில் ஆண்களுக்கு ஒரு நாள் போட்டி நடக்கவில்லை. ஆனால், மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது. இதில், சேஸிங் செய்யும் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளது. இதுவரையில் இந்த மைதானத்தில் 3 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
30 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது ஒருநாள் போட்டி பாதிக்குமா?
இதில் முதல் பேட்டிங் செய்த அணி ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பின்னர் 2ஆவதாக ஆடிய அணி 2 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக இலங்கை மகளிர் அணி 136 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
பிரையன் லாரா மைதானமானது சுழற்பந்துக்கு சாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடினால் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மைதானத்தில் டாஸ் ஜெயிக்கும் அணி கண்டிப்பாக பவுலிங் தேர்வு செய்ய வேண்டும்.
மேஜர் லீக்கில் அதிரடி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பிய நிக்கோலஸ் பூரன்!