Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு?

By Rsiva kumar  |  First Published Aug 1, 2023, 5:31 PM IST

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்த மாதம் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுகிறது. இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இதில், ரவீந்திர ஜடேஜா இடம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

பிசிசிஐயின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டெண்டர் வெளியீடு; ஆகஸ்ட் 21 கடைசி தேதி!

Tap to resize

Latest Videos

தற்போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணியில் ஆணவம் இல்லை – கபில் தேவ் விமர்சனத்திற்கு ஜடேஜா பதிலடி!

இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அயர்லாந்து தொடர் நடக்க இருக்கிறது. அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து மிக முக்கியமான ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக இந்திய அணியில் ஒவ்வொரு மாற்றமும் செய்து அணியை தயார் செய்யும் பணியில் தெர்வுக்குழு இறங்கி அடிக்கடி அணியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

30 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது ஒருநாள் போட்டி பாதிக்குமா?

இந்த நிலையில், இது குறித்து இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா கூறியிருப்பதாவது: கேப்டம் மற்றும் அணி நிர்வாகம் செய்யும் இந்த பரிசோதனையால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஒரு சில தோல்வியால் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆசிய கோப்பை 2023க்கான சேர்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது," என்று ஜடேஜா கூறினார்.

மேஜர் லீக்கில் அதிரடி ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்பிய நிக்கோலஸ் பூரன்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதன் மூலமாக 6 போட்டிகளில் விளையாடும். கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மைதாங்களில் ஆசிய கோப்பை தொடர் நடக்கிறது. 6 போட்டிகளில் 3ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!