டி20 உலக கோப்பை: இலங்கை மாதிரி ஆகிடாதீங்க.. ஸ்காட்லாந்தை எதிர்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸின் வலுவான லெவன்

By karthikeyan V  |  First Published Oct 16, 2022, 9:09 PM IST

டி20 உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான தகுதிப்போட்டியில் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸின் அணியின் வலுவான ஆடும் லெவனை பார்ப்போம்.
 


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் 21ம் தேதி வரை தகுதிப்போட்டிகள் நடக்கின்றன. 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கின்றன. 

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 8 அணிகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடும் அணிகள்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: விசா பிரச்னையால் ஆஸி.,க்கு பறக்கமுடியாத உம்ரான் மாலிக்..! இன்னொரு வீரரும் பாவம்

தகுதிப்போட்டிகளில் ஆடி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற 8 அணிகள் போட்டி போடுகின்றன. அந்த 8 அணிகளில் இடம்பெற்றுள்ள 2 பெரிய அணிகள் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகும். இந்த 2 அணிகளும் தகுதிப்போட்டிகளில் ஆடுவது அதிர்ச்சிதான். அதிலும், உலகெங்கும் நடக்கும் டி20 லீக் தொடர்களில் பெரும் அச்சுறுத்தலாக திகழும் அனைத்து வீரர்களையும் அணியில் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த லிஸ்ட்டில் இருப்பது பேரதிர்ச்சி.

ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆசிய சாம்பியன் இலங்கை அணி, இன்று நடந்த தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இலங்கை அடைந்த தோல்வி கண்டிப்பாக வெஸ்ட் இண்டீஸுக்கு அலாரமாக அமைந்துள்ளது. ஸ்காட்லாந்தை சாதாரணமாக எடைபோடாமல் மிகுந்த கவனத்துடன் ஆடவேண்டும் வெஸ்ட் இண்டீஸ்.

நாளை ஹோபர்ட்டில் நடக்கும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

இதையும் படிங்க - பாகிஸ்தான் அணியின் லெவலுக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது..! டி20 உலக கோப்பைக்கு முன் கடும் எச்சரிக்கை

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், அகீல் ஹுசைன், யானிக் காரியா, அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய்.
 

click me!