பாகிஸ்தான் அணியின் லெவலுக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது..! டி20 உலக கோப்பைக்கு முன் கடும் எச்சரிக்கை

By karthikeyan V  |  First Published Oct 16, 2022, 6:26 PM IST

டி20 உலக கோப்பையில் ஆடும் இந்திய அணி பாகிஸ்தான் அளவுக்கு பலமாக இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை இன்று தொடங்கிய நிலையில், வரும் 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கின்றன. 23ம் தேதி மெல்பர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்த உலக கோப்பையில் பழிதீர்க்கும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. 

இந்திய அணியின் பேட்டிங் பலமாக இருந்தாலும், பும்ரா இல்லாத பவுலிங் யூனிட் பலமற்றதாகவே தெரிகிறது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்குவதும், 140-150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலர்கள் இல்லாததும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி இதுதான்..! கேப்டன் ரோஹித் அதிரடி

அதைத்தான் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத்தும் தெரிவித்துள்ளார். இந்திய அணி குறித்து பேசிய ஆகிப் ஜாவேத்,  இந்திய அணி நல்ல ஃபார்மில் இருப்பதாக தெரியவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள். பும்ரா இல்லாத பவுலிங் யூனிட்டால் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. பாகிஸ்தானில் இருக்கும் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்று இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலர் இல்லை. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த ஆசிய சாம்பியன் இலங்கை

ஷாஹீன், ஹாரிஸ் ராஃப் ஆகியோர் அணியில் இருக்கும்போது எதிரணிக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். அதுமாதிரியான மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர்கள் இந்திய அணியில் இல்லை. இந்திய அணியில் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் தான் உள்ளனர். ஹர்திக் பாண்டியா தான் ஆட்டத்தை எந்த கட்டத்திலும் திருப்பக்கூடிய கேம் சேஞ்சர் என்று ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.
 

click me!