ரோஹித்தை வலைப்பயிற்சியில் திணறடித்த 11 வயது சிறுவன்..! வைரல் வீடியோ

By karthikeyan V  |  First Published Oct 16, 2022, 4:33 PM IST

துருஷில் சௌகான் என்ற 11 வயது சிறுவன் வலையில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசி அசத்தினார்.  
 


டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இன்று முதல் 21ம் தேதி வரை தகுதிப்போட்டிகளும்,  22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கின்றன. 23ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி, அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது.

பெர்த் WACA மைதானத்தில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்திய வீரர்கள் ஓய்வறையில் இருந்தபோது மைதானத்தில் பல சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். அதில், ஒரு சிறுவன் இடது கை ஃபாஸ்ட் பவுலிங் அபாரமாக வீசி அனைவரையும் கவர்ந்தார். அந்த சிறுவனை கவனித்த ரோஹித் சர்மா மற்ற வீரர்களிடமும் காட்ட, அனைவரும் அந்த சிறுவனின் பவுலிங்கை கண்டு வியந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி இதுதான்..! கேப்டன் ரோஹித் அதிரடி

பின்னர் அந்த சிறுவனை இந்திய அணியின் ஓய்வறைக்கு அழைத்து பாராட்டிய ரோஹித் சர்மா தனக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசவைத்தார். 11 வயதான துருஷில் சௌகான் என்ற அந்த சிறுவன், வலையில் ரோஹித்துக்கு அபாரமாக பந்துவீசி ரோஹித்தையே மிரட்டினார். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த ஆசிய சாம்பியன் இலங்கை

அந்த சிறுவனின் பவுலிங்கில் பேட்டிங் ஆடிவிட்டு, பின்னர் அந்த சிறுவனிடம் பேசிய ரோஹித் சர்மா, நீ அபாரமாக பந்துவீசுகிறாய். ஆனால் பெர்த்தில் இருக்கிறாயே.. நீ எப்படி இந்தியாவிற்காக ஆடுவாய் என்று கேட்டதற்கு, நான்(சிறுவன்) இந்தியாவிற்கு வரப்போகிறேன் என்று கூறியுள்ளார் அந்த சிறுவன்.
 

 
click me!