டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி இதுதான்..! கேப்டன் ரோஹித் அதிரடி

By karthikeyan V  |  First Published Oct 16, 2022, 4:04 PM IST

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கான இந்திய அணியின் ஆடும் லெவன் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 


டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் முதல் 21ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகளும் அதைத்தொடர்ந்து 22ம் தேதியிலிருந்து சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கவுள்ளன.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 23ம் தேதி மெல்பர்னில் நடக்கிறது. இரு அணிகளுக்குமே இந்த உலக கோப்பையில் அதுதான் முதல் போட்டி.

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த ஆசிய சாம்பியன் இலங்கை

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நிலையில், இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானை பழிதீர்க்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாத நிலையில், அவருக்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என்ற பேட்டிங் ஆர்டர் உறுதி. யுஸ்வேந்திர சாஹல் கண்டிப்பாக ஒரு ஸ்பின்னர். மற்றொரு ஸ்பின்னராக அஷ்வின், அக்ஸர் இருவரில் ஒருவர் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் கண்டிப்பாக ஆடுவார்கள். ஹர்ஷல் படேல் - ஷமி ஆகிய இருவரில் ஒருவர் யார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ரா குறித்து தடாலடியாக பேசிய கேப்டன் ரோஹித் சர்மா

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, கடைசி நிமிடத்தில் முடிவெடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. வீரர்களுக்கு யார் யார் ஆடுகிறார்கள், யார் யார் ஆடவில்லை என்பது குறித்த தெளிவு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் அதற்கேற்ப தயாராக முடியும். பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் ஆடும் லெவனை ஏற்கனவே உறுதி செய்து அனைத்து வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கடைசி நிமிடத்தில் முடிவெடுத்தால், அவர்களால் சிறப்பாக தயாராக முடியாது என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!