டி20 உலக கோப்பை: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த ஆசிய சாம்பியன் இலங்கை

By karthikeyan V  |  First Published Oct 16, 2022, 2:37 PM IST

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ஆசிய சாம்பியன் இலங்கை அணி.
 


டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் 21ம் தேதி வரை தகுதிப்போட்டிகளும், அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கின்றன.

க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள இலங்கை - நமீபியா அணிகள் முதல் தகுதிப்போட்டியில் மோதின. ஜீலாங்கில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா.

முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது. நமீபியா அணியில் ஜான் ஃப்ரைலிங்க் அதிகபட்சமாக 44 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஃப்ரைலிங்க் 28 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ஸ்மிட் 16 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுக்க, நமீபியா அணி 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆசிய சாம்பியன் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். கேப்டன் தசுன் ஷனாகா அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார். நிசாங்கா(9), குசால் மெண்டிஸ்(6), தனஞ்செயா டி சில்வா(12), குணதிலகா(0), பானுகா ராஜபக்சா(20) என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து  ஏமாற்றமளிக்க, இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க  - சுதந்திர இந்தியாவில் பிசிசிஐ-யில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்ல.! தாதா விஷயத்தில் பிசிசிஐ பொருளாளர் கருத்து

இதையடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளை வீழ்த்தி கோப்பையை வென்ற இலங்கை அணி, டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் தோற்று அதிர்ச்சியளித்துள்ளது.
 

click me!