டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Oct 15, 2022, 9:38 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. நாளை(அக்டோபர் 16) முதல் 21ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகளும் அதைத்தொடர்ந்து 22ம் தேதியிலிருந்து சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கவுள்ளன.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 23ம் தேதி மெல்பர்னில் நடக்கிறது. இரு அணிகளுக்குமே இந்த உலக கோப்பையில் அதுதான் முதல் போட்டி.

இதையும் படிங்க - சுதந்திர இந்தியாவில் பிசிசிஐ-யில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்ல.! தாதா விஷயத்தில் பிசிசிஐ பொருளாளர் கருத்து

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நிலையில், இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானை பழிதீர்க்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

அந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ரோஹித் - ராகுல் தொடக்க வீரர்கள். அதன்பின்னர் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என்ற பேட்டிங் ஆர்டர் கண்டிப்பாக உறுதியானவை. 

ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுவார்கள். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ரா குறித்து தடாலடியாக பேசிய கேப்டன் ரோஹித் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

click me!