சுதந்திர இந்தியாவில் பிசிசிஐ-யில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்ல.! தாதா விஷயத்தில் பிசிசிஐ பொருளாளர் கருத்து

By karthikeyan VFirst Published Oct 15, 2022, 8:18 PM IST
Highlights

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் பேசியுள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கடந்த 2018ம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்தார். சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. 

பிசிசிஐ தலைவர், செயலாளர் ஆகிய பதவிக்காலம் முடிவடையும் நிலையில், வரும் 18ம் தேதி மும்பையில் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதையும் படிங்க -  டி20 உலக கோப்பை: பும்ரா குறித்து தடாலடியாக பேசிய கேப்டன் ரோஹித் சர்மா

பிசிசிஐ செயலாளராக இருக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா அந்த பதவியில் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார். ஆனால் தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். எனவே அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. 

பாஜகவில் கங்குலி சேர மறுத்ததால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவிக்கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பிசிசிஐ செயலாளராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் நிலையில், கங்குலிக்கு மட்டும் வழங்கப்படாதது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதற்கு பாஜக சார்பில் பதிலளிக்கப்பட்டது. இப்படியாக, கங்குலி விவகாரம் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் விவாதமாக உருவெடுத்தது.

அதுகுறித்து விளக்கமளித்த சௌரவ் கங்குலி, கிரிக்கெட் ஆடினாலோ அல்லது நிர்வாக பொறுப்பில் இருந்தாலோ, எதுவாக இருந்தாலும் ஒரு நாள் அந்த பொறுப்பிலிருந்து விலகித்தான் ஆகவேண்டும் என்ற எதார்த்தத்தை கூறினார் கங்குலி.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் விவகாரம் குறித்து பேசியுள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால். இவரது பொருளாளர் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்ததாக ஐபிஎல் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 

இதையும் படிங்க - அரியலூர் கொலை சம்பவத்துக்கு காரணம் கோலியா..? கோலியை கைது பண்ணுங்க.. கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்

இதுகுறித்து பேசிய அருண் துமால், சுதந்திர இந்தியாவில் இதுவரை பிசிசிஐ தலைவர் பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் யாருமே இருந்ததில்லை. பிசிசிஐ தலைவராக இருந்த யாருக்குமே இதுவரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதில்லை. கங்குலிக்கு எதிராக யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகள் என்று அருண் துமால் கூறியுள்ளார்.
 

click me!