T20 World Cup: நமீபியாவுக்கு எதிரான முதல் தகுதிப்போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியின் வலுவான ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Oct 15, 2022, 9:46 PM IST

டி20 உலக கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான தகுதிப்போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அக்டோபர் 16 முதல் 21 வரை தகுதிச்சுற்று போட்டிகளும், அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் இரு பிரிவுகளாக பிரித்து நடத்தப்படுகின்றன. 

க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளும், க்ரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த 8 அணிகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடும் அணிகள். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ரா குறித்து தடாலடியாக பேசிய கேப்டன் ரோஹித் சர்மா

சூப்பர் 12 சுற்றுக்கான எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் ஆடி அதன்மூலம் தேர்வாகும். தகுதிச்சுற்றில் ஆடும் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 

க்ரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் நமீபியா அணிகள் நாளை ஜீலாங்கில் மோதுகின்றன. இலங்கை அணி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறவில்லை என்றாலும், அண்மையில் ஆசிய கோப்பையை வென்று மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் டி20 உலக கோப்பைக்கு வந்துள்ளது.

தசுன் ஷனாகா தலைமையில் இலங்கை அணி இளம் வீரர்களை கொண்ட மிரட்டல் படையாக உள்ளது. தகுதிச்சுற்றில் நமீபியா, அமீரகம், நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்வதால் அந்த அணிக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை முன்னேறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

நாளை(அக்டோபர் 16) நமீபியாவிற்கு எதிராக நடக்கும் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். மிடில் ஆர்டரில் தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா ஆகியோரும் ஆடுவார்கள். கேப்டன் தசுன் ஷனாகா பின்வரிசையில் ஃபினிஷராக ஆடுவார். ரிஸ்ட் ஸ்பின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவுடன் மற்றொரு ஸ்பின்னராக மஹீஷ் தீக்‌ஷனா ஆடுவார்.

ஃபாஸ்ட் பவுலர்களாக சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா மற்றும் பிரமோத் மதுஷன் ஆகிய மூவரும் ஆடுவார்கள். இதுதான் இலங்கையின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனாக இருக்கும்.  பிரமோத் மதுஷன் ஆசிய கோப்பையில் அபாரமாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

உத்தேச இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, மஹீஷா தீக்‌ஷனா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரமோத் மதுஷன்.

click me!