WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Jul 18, 2022, 2:23 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களையும் வென்றது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. முதலில் ஒருநாள் தொடரும், அடுத்து டி20 தொடரும் நடக்கின்றன. 

இதையும் படிங்க - ENG vs IND: ரிஷப் பண்ட் அபார சதம்.. பாண்டியா அரைசதம்! 3வது ODIயில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

இந்திய அணி இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் வெஸ்ட் இண்டீஸுக்கு செல்கிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியோ, அண்மையில் சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் 0-3 என ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அந்த தோல்வியிலிருந்து மீண்டு இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை மீண்டும் ஒருநாள் அணியில் சேர்த்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷேய் ஹோப், ப்ரூக்ஸ், கார்ட்டி, அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், கைல் மேயர்ஸ், கீமோ பால் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாத, நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவை வீழ்த்த ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரின் பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்து அவரை மீண்டும் சேர்த்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையும் படிங்க - நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித், கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ரோஹித் ஆடாததால் தவான் தான் கேப்டன்சி செய்கிறார். எனவே அது வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக அமையலாம்.  ஆனாலும், இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிவருவதால், ஒரு அணியாக சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய அணியை வீழ்த்துவது வெஸ்ட் இண்டீஸுக்கு சவாலாக இருக்கும். ரோஹித்தின் கேப்டன்சியை இந்திய அணி மிஸ் செய்தாலும், ஒரு அணியாக சிறப்பாக ஆடும் என்பதால், இந்திய அணியை வீழ்த்துவது வெஸ்ட் இண்டீஸுக்கு கடினமான டாஸ்க் தான்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

நிகோலஸ் பூரன் (கேப்டன்), ஷேய் ஹோப் (துணை கேப்டன்), ஷமர் ப்ரூக்ஸ், கீஸி கார்ட்டி, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், ரோவ்மன் பவல், ஜெய்டன் சீல்ஸ்.
 

click me!