நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

Published : Jul 17, 2022, 09:54 PM IST
நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

சுருக்கம்

தான் இன்றைக்கு இந்திய அணிக்காக ஆடுமளவிற்கு வளர்ந்திருப்பதற்கு, ரோஹித் சர்மா தன் மீது காட்டிய நம்பிக்கை தான் முக்கியமான காரணம் என்று சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.  

இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான அங்கமாக சூர்யகுமார் யாதவ் மாறியுள்ளார். ஐபிஎல், உள்நாட்டு போட்டிகள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன்விளைவாக இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன்னை தேர்வாளர்கள் புறக்கணிக்கமுடியாதபடி செய்து, அதன்விளைவாக இந்திய அணியில் இடத்தையும் பிடித்து, கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 48 பந்தில் சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ், ஒருநாள் தொடரிலும் ஆடினார். இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் தனக்கான இடத்தை பிடித்துவிட்ட சூர்யகுமார் யாதவ், தனது கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - கோலி 70 சதங்களை கேண்டி கிரஷ் விளையாடியா அடிச்சாப்ள..? அவரு கிரேட் பிளேயர்.. அக்தர் அதிரடி

ஐபிஎல்லில் சூர்யகுமார் யாதவ் ஆடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. சூர்யகுமார் யாதவ் மீது எப்போதுமே நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் ரோஹித் சர்மா. அதை சுட்டிக்காட்டி தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

இதுகுறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், நான் உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடிய காலத்திலிருந்து என்னை பார்த்துவருகிறார் ரோஹித் சர்மா. அப்போதிலிருந்தே என்னுடன் பேசுவார். எனக்கு அறிவுரைகளை வழங்கிவருகிறார். 

ஐபிஎல்லை பொறுத்தமட்டில் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 2018-2019 ஐபிஎல்லில் என்னுடன் நிறைய பேசுவார். அழுத்தமான, நெருக்கடியான சூழல்களில் எப்படி ஆட வேண்டும், அந்த சூழல்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். அவரிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். அவர் என் மீது காட்டிய நம்பிக்கை மிகச்சிறப்பானது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவர் என் மீது காட்டிய நம்பிக்கைக்கு, அவருக்காக போட்டியை ஜெயித்து கொடுப்பதுதான் நான் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும் என்று சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க - விராட் கோலியின் மற்றுமொரு சாதனையை தகர்த்தார் பாபர் அசாம்

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டார் சூர்யகுமார் யாதவ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Women's T20 World Cup: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி ரெடி! முதல் மேட்ச்சே பாகிஸ்தானுடன் மோதல்!
Vaibhav Suryavanshi: 15 வயசு சிறுவனிடம் வீரத்தை காட்டிய DC பவுலர்.. செக் வைத்த பிசிசிஐ!