#WIvsSL எவின் லூயிஸ் அபார சதம்.. 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்

Published : Mar 13, 2021, 02:40 PM IST
#WIvsSL எவின் லூயிஸ் அபார சதம்.. 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.  

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது.

2வது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குணதிலகா அபாரமாக ஆடி சதத்தை நெருங்கினார். ஆனால் 96 ரன்னில் ஆட்டமிழந்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார். விக்கெட் கீப்பர் சண்டிமாலும் சிறப்பாக ஆடி 71 ரன்களை விளாச, ஹசரங்கா 31 பந்தில் 47 ரன்களை வேகமாக சேர்க்க, 50 ஓவரில் 273 ரன்களை குவித்தது இலங்கை அணி.

274 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் மற்றும் எவின் லூயிஸ் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கே 192 ரன்களை குவித்தனர். ஹோப் 84 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய லூயிஸ் சதமடித்தார். 121 பந்தில் 103 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழக்க, அவர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்ததால் அதன்பின் வந்தவர்கள் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர்.

கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றுவிட்டது.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!