கிரிக்கெட் வரலாற்றிலேயே பெஸ்ட் ஷாட் இதுதான்..! ரிஷப் பண்ட்டின் ரிவர்ஸ் ஸ்கூப்பிற்கு குவிந்த பாராட்டுகள் வீடியோ

By karthikeyan VFirst Published Mar 13, 2021, 2:14 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆர்ச்சரின் பந்தில் ரிஷப் பண்ட் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் தான், கிரிக்கெட்டில் இதுவரை ஆடப்பட்ட ஷாட்டுகளிலேயே மிகச்சிறந்த ஷாட் என கெவின் பீட்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயரை(67) தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் இந்திய அணி, 20 ஓவரில் வெறும் 124 ரன்களை மட்டுமே அடிக்க, 125 ரன்கள் என்ற எளிய இலக்கை 16வது ஓவரிலேயே அடித்து இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் பாராட்டுகளை குவித்துவருகிறது. ராகுல், கோலி ஆகிய இருவரும் முறையே 1 மற்றும் 0வில் வெளியேற, 3வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட ரிஷப் பண்ட், ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் ஒரு சிக்ஸர் அடித்தார்.

வித்தியாசமான ஷாட்டுகளை ஆடுவதில் வல்லவர் ரிஷப் பண்ட். அதிலும் அண்மைக்காலமாக செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். இந்நிலையில், சுமார் 145 கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்தை அசால்ட்டாக ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்ஸர் அடித்து மிரட்டினார் ரிஷப் பண்ட். அதைக்கண்டு ஆர்ச்சருடன் சேர்ந்து இங்கிலாந்து வீரர்கள் அனைவருமே வியப்பும் மிரட்சியும் அடைந்தனர். இங்கிலாந்து வீரர்கள் மட்டுமல்லாது இந்திய வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் மிரண்டே போனார்கள்.

141 clicks & Rishabh Pant played reverse sweep to Jofra Archer INCREDIBLE 💥 pic.twitter.com/bXyEJoqSPO

— Abhinav (@DeadlyYorkers)

ஆர்ச்சரின் அதிவேகத்தில் அசால்ட்டாக ரிஷப் அடித்த அந்த ஷாட்டை கெவின் பீட்டர்சன், கம்பீர், லக்‌ஷ்மண், வாசிம் ஜாஃபர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வெகுவாக புகழ்ந்துள்ளனர்.

”கிரிக்கெட்டின் தலைசிறந்த ஷாட்டை ரிஷப் பண்ட் ஆடியுள்ளார். புதிய பந்தில் ஆர்ச்சர் 145 கிமீ வேகத்தில் வீசிய பந்தை ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்கூப்பின் மூலம் சிக்ஸர் அடிப்பதெல்லாம் வேற லெவல் ஷாட்” என்று பீட்டர்சன் புகழ்ந்துள்ளார்.

”ஆண்டர்சனின் பந்தில் ரிவர்ஸ் லாப் பவுண்டரி; ஆர்ச்சரின் பந்தில் ரிவர்ஸ் ஸ்கூப் சிக்ஸர். ரிஷப்பின் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று வாசிம் ஜாஃபர் புகழ்ந்துள்ளார்.

லக்‌ஷ்மண், கவுதம் கம்பீர் உட்பட பல முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப் பண்ட்டை புகழ்ந்துள்ளனர்.
 

click me!