#INDvsENG டாஸ் போட்டதுமே ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கிப்போட்ட கேப்டன் கோலி..!

Published : Mar 12, 2021, 09:48 PM IST
#INDvsENG டாஸ் போட்டதுமே ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கிப்போட்ட கேப்டன் கோலி..!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடமாட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல்(1), தவான்(4), கோலி(0), ரிஷப் பண்ட்(21), பாண்டியா(19) ஆகிய அனைவருமே ஏமாற்றமளிக்க, ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த 67 ரன்களால் இந்திய அணி 20 ஓவரில் 124 ரன்கள் அடித்தது. 125 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்து அணி எளிதாக அடித்துவிடும்.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடவில்லை. டாஸ் போடும்போது பேசிய கேப்டன் விராட் கோலி, முதல் 2 டி20 போட்டிகளில் ரோஹித்துக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதனால், 2வது போட்டியிலும் ரோஹித் ஆடமாட்டார். ரோஹித் ஆடாததன் விளைவாக முதல் போட்டியிலேயே இந்திய அணி பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிய நிலையில், அடுத்த போட்டியிலும் ரோஹித் ஆடாதது கண்டிப்பாக ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ: கடைசி வரை போராடிய 'கிங்' கோலி.. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வரலாற்று சாதனை! மாஸ்!
மிட்ச்செல், பிலிப்ஸ் ருத்ரதாண்டவம்.. இந்திய பவுலர்களை தண்ணி குடிக்க வைத்த நியூசிலாந்து! மெகா சாதனை!