#INDvsENG நீண்டகாலத்திற்கு செம குட் நியூஸ் சொன்ன பாண்டியா..! ரசிகர்கள் குஷியோ குஷி

By karthikeyan VFirst Published Mar 12, 2021, 7:14 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு செம மகிழ்ச்சியான செய்தி கூறியிருக்கிறார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் ராகுலும் தவானும் தொடக்க வீரர்களாக இறங்கியுள்ளனர். ரோஹித் சர்மாவிற்கு முதல் 2 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், சாஹல் ஆகிய மூவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரும் ஆடுகின்றனர்.

காயம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் மிகக்குறைவான சர்வதேச போட்டிகளிலேயே ஆடியுள்ள ஹர்திக் பாண்டியா, முழு ஃபிட்னெஸுடன் இந்த தொடரில் ஆடுகிறார். ஆஸி.,க்கு எதிரான தொடரில் ஆடியபோது கூட, ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை. முழு ஃபிட்னெஸ் இல்லாததால், ஐபிஎல், ஆஸி.,க்கு எதிரான தொடர் ஆகிய தொடர்களில் பேட்டிங் மட்டும்தான் ஆடினாரே தவிர, பாண்டியா பந்துவீசவில்லை. இந்நிலையில், இந்த தொடரில் பந்துவீசவுள்ளதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

முதல் டி20 போட்டிக்கான டாஸ் போட்ட பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா, ஒன்றரை மாதமாக டி20 தொடருக்காக தயாராகிவருகிறேன். டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், இது மிக முக்கியம். இந்த தொடரில் நான் பந்துவீசுவதை நீங்கள் பார்க்கலாம். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நல்ல டெப்த் உள்ளது.

அணியின் எந்த மாதிரியான தேவையையும் எந்த சூழலிலும் நிவர்த்தி செய்வேன். இந்திய அணியில் நல்ல டெப்த் உள்ளது; இது அணிக்கு நல்லது; எனவே அசத்திவிடலாம். ஆனாலும் டி20 போட்டியில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
 

click me!