WI vs BAN 2வது டி20: ரோவ்மன் பவல் காட்டடி அரைசதம்.. வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 4, 2022, 2:53 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 

2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் கிங் 57 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான கைல் மேயர்ஸ் 12 ரன்னிலும், ப்ரூக்ஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - ENG vs IND: ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கத்துக்கப்பா கோலி..! சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடி

கேப்டன் நிகோலஸ் பூரன் நிதானமாக ஆடி 30 பந்தில் 34 ரன்கள் அடித்தார்.  5ம் வரிசையில் இறங்கிய ரோவ்மன் பவல் சிக்ஸர்களாக விளாசி அரைசதம் அடித்தார். 28 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

192 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் மட்டுமே பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 68 ரன்கள் குவித்தார். அஃபிஃப் ஹுசைன் 34 ரன்கள் அடித்தார். இவர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் வங்கதேச அணி 20 ஓவரில் 158 ரன்கள் மட்டுமே அடித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க - கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

இந்த வெற்றியின் மூலம் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்றால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றுவிடும். ஆனால் வங்கதேசம் வென்றுவிட்டால் தொடர் சமனடைந்துவிடும்.
 

click me!