இங்கிலாந்தில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் பட்டைய கிளப்பிய இந்திய வீரர்கள்! 2வது பயிற்சிபோட்டியிலும் வெற்றி

By karthikeyan VFirst Published Jul 4, 2022, 2:28 PM IST
Highlights

நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான 2வது டி20 பயிற்சி போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. கடந்த சுற்றுப்பயணத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூலை 1ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் முடிந்ததும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

அந்த டி20 தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் விதமாக இந்தியன்ஸ் என்ற பெயரில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் இங்கிலாந்து உள்நாட்டு அணிகளுக்கு எதிராக 2 பயிற்சி போட்டிகளில் ஆடியது. டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

2வது பயிற்சி போட்டியில் நார்த்தாம்ப்டன்ஷைர் அணியை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நார்த்தாம்ப்டன்ஷைர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கும் ராகுல் திரிபாதி, அந்த வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாமல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவும் டக் அவுட்டானார். இஷான் கிஷன் 16 ரன்னும் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 34 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் இறங்கிய பவுலரான ஹர்ஷல் படேல், தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஹர்ஷல் படேல் 36 பந்தில் 54 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது இந்தியன்ஸ் அணி.

இதையும் படிங்க - ENG vs IND: ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கத்துக்கப்பா கோலி..! சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடி

150 ரன்கள் என்ற இலக்கை நார்த்தாம்ப்டன்ஷைர் அணி விரட்டிய நிலையில், இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். அதன்விளைவாக தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் நார்த்தாம்ப்டன்ஷைர் அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய பவுலர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வெங்கடேஷ் ஐயர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்த, 19.3 ஓவரில் 139 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியில் இந்தியன்ஸ் அணி 2 டி20 பயிற்சி போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. 
 

click me!