ஹர்ஷல் படேல் அதிரடி அரைசதம்..! வாய்ப்பை வீணடித்த சாம்சன், திரிபாதி

Published : Jul 03, 2022, 09:39 PM IST
ஹர்ஷல் படேல் அதிரடி அரைசதம்..! வாய்ப்பை வீணடித்த சாம்சன், திரிபாதி

சுருக்கம்

நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான டி20 பயிற்சி போட்டியில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், ஹர்ஷல் படேலின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 149 ரன்கள் அடித்த இந்தியன்ஸ் அணி, 150 ரன்கள் என்ற இலக்கை நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. கடந்த சுற்றுப்பயணத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று (ஜூலை1) தொடங்கி நடந்துவருகிறது. இந்த டெஸ்ட் முடிந்ததும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

அந்த டி20 தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் விதமாக இந்தியன்ஸ் என்ற பெயரில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் இங்கிலாந்து உள்நாட்டு அணிகளுக்கு எதிராக 2 பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன. டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இன்று நடந்துவரும் 2வது பயிற்சி போட்டியில் நார்த்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிராக ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நார்த்தாம்ப்டன்ஷைர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கும் ராகுல் திரிபாதி, அந்த வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ளாமல் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவும் டக் அவுட்டானார். இஷான் கிஷன் 16 ரன்னும் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர்.

தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 34 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் இறங்கிய பவுலரான ஹர்ஷல் படேல், தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஹர்ஷல் படேல் 36 பந்தில் 54 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது இந்தியன்ஸ் அணி.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!