இங்கி.,யை 300 ரன்கள் கூட அடிக்கவிடாமல் சுருட்டிய இந்தியா! வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடும் இந்திய அணி

Published : Jul 03, 2022, 07:38 PM IST
இங்கி.,யை 300 ரன்கள் கூட அடிக்கவிடாமல் சுருட்டிய இந்தியா! வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடும் இந்திய அணி

சுருக்கம்

இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடுகிறது இந்திய அணி.  

இந்தியா - இங்கிலாந்து  இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட்  போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரிஷப் பண்ட் (146) மற்றும் ஜடேஜாவின்(104) சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை 2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரின் விக்கெட்டையும் இழந்தது. இருவருமே ஒற்றை இலக்கத்தில் பும்ராவின் பந்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஆலி போப்பும் 10 ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - மூடிகிட்டு பேட்டிங் ஆடு.. பேர்ஸ்டோவை கத்திய கோலி..! விளையாட்டாய் ஆரம்பித்து வினையாய் முடிந்த ஸ்லெட்ஜிங்

ஜோ ரூட்(31), ஜாக் லீச்சும்(0) ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. 3ம் நாள் ஆட்டத்தை பென் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 66 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 25 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த சாம்பில்லிங்ஸும் நன்றாக பேட்டிங் ஆடினார்.

சிறப்பாக பேட்டிங் ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். ஆனால் சதத்திற்கு பின் அவரை சோபிக்கவிடாமல் 106 ரன்களுக்கு வீழ்த்தினார் ஷமி. அதன்பின்னர் ஸ்டூவர்ட் பிராட் ஒரு ரன்னிலும், மேட்டி பாட்ஸ் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - ENG vs IND: ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்து கத்துக்கப்பா கோலி..! சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடி

இந்திய அணி சார்பில்  அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

132 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை ஆடுகிறது. முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலை பெற்றிருப்பதால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cupல் 300 ரன்கள்; ருத்ரதாண்டவம் ஆடுமா இந்தியா? புதிய வரலாறு படைக்க 5 காரணங்கள்!
ஷாக் நியூஸ்! ஜஸ்பிரித் பும்ராவிற்கு திடீர் வைரஸ் தொற்று: முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்? ரசிகர்கள் அதிர்ச்சி!