#WIvsAUS கடைசி டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸிடம் படுதோல்வி அடைந்து தொடரை படுமட்டமா இழந்த ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 3:15 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 4-1 என டி20 தொடரை வென்றது.
 

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் ஆடியது. இந்த போட்டியின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி ஒரு வெற்றியை பெற்றது.

இதையடுத்து 5வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் அதிரடியாக ஆடி 34 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்தார்.

அவரது அதிரடியால் பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய ஸ்கோரை உறுதி செய்து கொடுத்தனர் கெய்ல், பூரன். கெய்ல் 7 பந்தில் 21 ரன்கள் விளாச, கேப்டன் பூரன் 18 பந்தில் 31 ரன்கள் அடித்தார். ஹைடன் வால்ஷ் கடைசி நேரத்தில் 12 ரன்கள் விளாச 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையடுத்து 200 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் நல்ல தொடக்கம் கிடைத்த ஃபின்ச்(34), மிட்செல் மார்ஷ்(30), ஹென்ரிக்ஸ்(21), மேத்யூ வேட்(26) ஆகிய ஆகிய அனைவருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல், செட்டில் ஆனபின்னர் ஆட்டமிழந்ததன் விளைவாக, 20 ஓவரில் 183 ரன்கள் அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து 4-1 என டி20 தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக எவின் லூயிஸும், தொடர் நாயகனாக ஹைடன் வால்ஷும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

click me!